உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  அமெரிக்க எத்தனால் இறக்குமதி இந்தாண்டு புதிய உச்சம்

 அமெரிக்க எத்தனால் இறக்குமதி இந்தாண்டு புதிய உச்சம்

அ மெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எத்தனால், இந்தாண்டு புதிய உச்சத்தை தொடும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எத்தனால், இந்தியாவில் மருந்து, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ரசாயனத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 35.39 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சராசரியாக மாதத்துக்கு 3.93 லட்சம் பேரல்கள் இறக்குமதியாகி உள்ளன. இது கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்டதை விட அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்