புதிய கார்களை ஓவர்டேக் செய்யும் பழைய கார் விற்பனை
புதுடில்லி; புதிய கார் விற்பனையை விட பழைய கார் விற்பனை அதிகரிப்பதாக, வாகனத் துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். பழைய கார்களின் தேவை அதிகரிப்பதால், அதன் சராசரி விலையும் உயர்வதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, பழைய கார் விற்பனை நிறுவனமான ஸ்பின்னி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான நீரஜ் சிங் கூறியதிலிருந்து சில முக்கிய விபரங்கள்: இந்தியாவின் பழைய கார் சந்தை, கடந்த சில ஆண்டுகளாக 10 முதல் 12 சதவீதம் ஆண்டு வளர்ச்சியில் உள்ளது அதாவது, ஆண்டுக்கு 65 முதல் 70 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகி வருகின்றன அடுத்த நிதியாண்டில், பழைய கார் சந்தை மதிப்பு 34,000 கோடி ரூபாயாக இருக்கும் பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் புனேவில் பழைய கார் விற்பனை வளர்ச்சி உயர்ந்து வருகிறது கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் விலை 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளது காம்பாக்ட் எஸ்.யு.வி.,கள், மற்றும் ஹேட்ச்பேக் கார்களை வாங்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் புதிய கார்களை வாங்குவோர் இப்போது, 4 - 5 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் புதிய கார்களுக்கு மாறுவோர், 2022ல் 12 சதவீதமாக இருந்தது, 2024ல் 22 சதவீதமாக உயர்வு.இந்தியாவில், 1,000 பேருக்கு, 34 பேர் கார்களை பயன்படுத்துகின்றனர். 2022 தரவுகளின்படி, ஐரோப்பாவில் 600 பேரும், அமெரிக்காவில் 850 பேரும் கார்களை பயன்படுத்துகின்றனர்