உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வலுவான தேவை நீடிப்பால் வாகன விற்பனை அதிகரிப்பு

 வலுவான தேவை நீடிப்பால் வாகன விற்பனை அதிகரிப்பு

வ லுவான தேவை நீடித்ததால், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா உள்ளிட்ட அனைத்து கார் நிறுவனங்களின் விற்பனையும் கடந்த மாதம் அதிகரித்துள்ளது. மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், ஏற்றுமதியோடு சேர்த்து மொத்தம் 2.29 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இதுவே ஒரு மாதத்தில் நிறுவனத்தின் அதிகபட்ச விற்பனை ஆகும். கடந்தாண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் 26 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வெகிக்கிள்ஸ், மஹிந்திரா அண்டு மஹிந்திராவின் நிறுவனங்களின் விற்பனை தலா 22 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. ஹூண்டாய், டொயோட்டா, கியா, ரெனோ ஆகிய நிறுவனங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இரு சக்கர வாகன பிரிவில் ஹோண்டா நிறுவனத்தின் விற்பனை 25 சதவீதமும்; ராயல் என்பீல்டு விற்பனை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை ஒரு சதவீதம் குறைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ