8 நிறுவனங்களின் மதிப்பு சரிவு
மும்பை பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள டாப் 10 நிறுவனங்களில், எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் மொத்தம் 79,129.21 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.மாறாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு 20,434 கோடி ரூபாயும், லார்சன் அண்டு டூப்ரோ சந்தை மதிப்பு 4,910.82 கோடி ரூபாயும் அதிகரித்து உள்ளன.