உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்

மோசடிக்கு வீசப்படும் 8 துாண்டில்கள்

நம் ஆரோக்கியத்துக்கு ஏதாவது பிரச்னை என்றால், நமது உடல் தலைவலி, வயிற்று வலி என ஏதாவது அறிகுறியை காட்டுவதுண்டு. இதேபோல, நம் பணத்தை அபகரிக்க முயற்சிப்போரின் அறிகுறிகளையும் நாம் எளிதாக அடையாளம் கண்டு, தவிர்த்து விடலாம்.

மோசடிக்கான சில அறிகுறிகள்

 முதலீடுக்கு வங்கிகள் வழங்குவதைவிட மிக அதிகமாக வட்டி தருவதாக உறுதி அளிப்பது  விரைவாக முதலீடு செய்தால், ஊக்கத் தொகை பெறலாம் என விற்பனை பிரதிநிதி கூறுவது  இந்த முதலீட்டு திட்டம் குறுகிய காலத்துக்கு மட்டுமே என, தூண்டில் போடுவது  நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினரை சேர்த்தால் பரிசு வழங்கப்படும் என்பது  பெயர் தெரியாத நிறுவனங்கள், இணைய தளங்களில் இலவச சேவை வழங்குவது  தொலைபேசியில் அழைத்து, பரிசு ஆசை காட்டுவது, அல்லது வழக்கு தொடரப்படும் என மிரட்டுவது  அரசு அமைப்புகள் வங்கிக் கணக்கு விபரம் கேட்பதாக வரும், தனிநபர்களின் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள்  ஆர்.பி.ஐ., உள்ளிட்ட அரசு அமைப்புகள் அங்கீகரிக்காத, விற்பனை பிரதிநிதிகளின் ஆசை வார்த்தை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை