மேலும் செய்திகள்
எந்த நேரத்திலும் 'பிராபிட் புக்கிங்' நடைபெறலாம்
04-Nov-2026
ந ிப்டி முக்கிய சராசரிகள் மற்றும் போலிங்கர் பேண்டுக்கு மேலே 25,800ல் நிறைவடைந்துள்ளது. இது தற்போது நடைபெறும் டிரெண்டின் வலிமையை உணர்த்துகிறது. மொமென்டம் இண்டிக்கேட்டர்களும் ஏற்றத்திற்கு சாதகமாகவே உள்ளது. ஆனால், ஸ்டொக்காஸ்ட்டிக் இண்டிக்கேட்டர்கள் ‘ஓவர்பாட்’ நிலையை அடைந்துள்ளன. இது ஏற்றத்தின் வேகம் தற்காலிகமாக குறையலாம் என்பதை காட்டுகிறது. மொத்தத்தில் டெக்னிக்கல் சூழல் ஏற்றத்திற்கு சாதகமாக இருந்தாலும் சமீபத்தில் கண்ட வேகமான ஏற்றத்தினால் எந்த நேரத்திலும் லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்துடன் விற்பனை நடைபெறுவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. உடனடி ரெசிஸ்டென்ஸான 25,808க்கு மேலேயே நிப்டி நிலைத்திருந்தால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இறக்கம் வந்தால் 25,660 மற்றும் 25,104ல் சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
(1) 5 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு (2) 10 நாள் சராசரி டெலிவரி அதிகரிப்பு(3) நேற்று ஒரு நாளில் விலை மற்றும் வால்யூம் அதிகரிப்பு (4) 5 நாளில் சராசரி வால்யூம் அதிகரிப்பு(5) 10 நாள் சராசரி வால்யூம் அதிகரிப்பு (6) 5 நாளில் விலை ஏற்றம்அனலிஸ்ட் குறித்த ஒழுங்குமுறை தகவல்களுக்கு https://www.skarthikeyan.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
04-Nov-2026