தங்கம் விலை 2026ல் ரூ.1.90 லட்சமாக உயரும்
அடுத்தாண்டிலும் தங்கம் விலை உயர்வு தொடரும் என்றும், 24 காரட் தங்கம், 10 கிராம் 1.90 லட்சம் ரூபாயை எட்டக்கூடும் என்றும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. கவுன்சிலின் தலைமை அதிகாரி டேவிட் டைட் கூறுகையில், தங்கம் விலை உயர்வு பாதை, வரும் ஆண்டிலும் தொடரும் என்பதையே முக்கிய காரணிகள் காட்டுகின்றன. 2026 இறுதிக்குள் 10 கிராம் 1.90 லட்சம் ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். குறுகிய கால அதிர்ச்சிகளை விட, அமைப்புரீதியான தாக்கங்கள் தங்கத்தின் விலையில் நீடிக்கின்றன. குறிப்பாக, தங்க இ.டி.எப்., மற்றும் தங்கத்தில் மற்ற முதலீடுகளுக்கு மாறுவோர் அதிகரிப்பு, ஜப்பானில் நடைபெறும் பெரிய அளவிலான, தலைமுறை சொத்து மாற்றம், சீன கட்டுப்பாடுகள் நீக்கம் ஆகியவை தங்கம் விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.