உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகை

 புதிய முதலீட்டாளர்களை ஊக்குவிக்க வினியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகை

ச ி று நகரங்களில் வசிப்பவர்களும் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காக, மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களுக்கு ஊக்கத் தொகை திட்டத்தை செபி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது. அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படாது என்றும்; அந்தந்த மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்கனவே ஒதுக்கியுள்ள நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊக்கத் தொகையானது, வினியோகஸ்தர்கள் வழக்கமாக பெறும் கமிஷனுடன் சேர்த்து வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், குறுகியகாலத்தில் முதலீடு செய்யும் சில திட்டங்களில் முதலீடு செய்யும் முதல்முறை முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தினால், ஊக்கத்தொகை கிடையாது எனவும் செபி தெரிவித்துள்ளது.

எதற்கெல்லாம் ஊக்கத்தொகை ?

முதல்முறையாக மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்பவர்களை அறிமுகப்படுத்தும் வினியோகஸ்தர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது இரண்டு குறிப்பிட்ட குழுக்களை அறிமுகப்படுத்துபவர்களுக்கே கிடைக்கும். 1 பி---30 எனப்படும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களை முதல்முறையாக முதலீட்டாளர்களாக அறிமுகம் செய்தால் கிடைக்கும். 2 இந்தியாவில் எந்த பகுதிகளில் வசிக்கும் பெண் முதலீட்டாளர்களை அறிமுகம் செய்தாலும் ஊக்கத் தொகை வழங்கப்படும். 3 முதல்முறை முதலீட்டாளர்கள் மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி., முறையிலோ முதலீடு செய்தால், 1 சதவீதம் ஊக்கத்தொகை; ஆனால், முதலீட்டாளர் அந்த திட்டத்தில் ஓராண்டு வரை நீடித்திருக்க வேண்டும். 4 வினியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையின் அளவு அதிகபட்சமாக 2,000 ரூபாய்.

எவற்றுக்கெல்லாம் இல்லை?

 எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்டுகள் (இ.டி.எப்.,கள்)  டொமஸ்டிக் பண்டு ஆப் பண்டுகள்  ஓவர்நைட் பண்டுகள், லிக்விட் பண்டுகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ