ஐ.பி.ஓ., அலசல் பைன் லேப்ஸ்
புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் பைன் லேப்ஸ் நிறுவனம், வணிகர்கள், நுகர்வோர் பிராண்டுகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களுக்கு, நிதிதொழில்நுட்ப பேமென்ட் சேவையை, இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் வழங்கி வருகிறது.
சிறப்பம்சங்கள் * வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் சேவை துறையில் இருப்பது.* சிங்கப்பூர், மலேஷியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் சேவைகளை வழங்கி வருவது.* டீமாசேக், பீக் எக்ஸ்வி, பேபால் மாஸ்டர்கார்ட் மற்றும் ஆக்டிஸ் போன்ற முதலீட்டாளர்களின் பங்களிப்பு.* பாயின்ட் ஆப் சேல் உபகரணங்கள், கிளவுட் சர்வீசஸ் மற்றும் டெவலப்பர்களுக்கான ஏ.பி.ஐ.,-க்களை ஒருங்கிணைக்கும் சொந்தமான மென்பொருளை வைத்திருப்பது.* பரிவர்த்தனை கட்டண வருமானத்தை மட்டும் நம்பி இல்லாமல், துறை சார்ந்த டெக்னாலஜி தீர்வுகள் மற்றும் கிப்ட் கார்டுகள் மூலமும் வருமானம் பெறுதல்.