உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  அடுத்த ஆண்டிலும் ஐ.பி.ஓ., திருவிழா

 அடுத்த ஆண்டிலும் ஐ.பி.ஓ., திருவிழா

இந்தியாவில் வரும் 2026ம் ஆண்டில், நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வாயிலாக இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்ட தயாராக உள்ளதாக, 'பிரைம் டேட்டாபேஸ்' நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்கள் வெளியான நிலையில், வரும் ஆண்டிலும் அது தொடர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக, 2026ம் ஆண்டில், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க 84 நிறுவனங்கள் செபியிடம் ஏற்கனவே ஒப்புதலை பெற்றுவிட்டன. இதன் வாயிலாக, 1.14 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளன. மேலும், 108 நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,வில் களமிறங்குவதற்காக செபியிடம் அனுமதி கேட்டு காத்திருக்கின்றன. இந்நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 1.46 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு வருகின்றன. எனவே, அடுத்த ஆண்டில் 192 நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வெளியிட செபியிடம் அனுமதி பெற்றோ அல்லது ஒப்புதலுக்காகவோ காத்திருக்கும் நிலையில் உள்ளன. இந்த ஐ.பி.ஓ.,க்கள் வாயிலாக, இந்நிறுவனங்கள் கிட்டதட்ட 2.50 லட்சம் ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளன என அந்நிறுவனத்தின் தரவுகள் கூறுகின்றன. 192 நிறுவனங் கள் தயார் 84 நிறுவனங்களுக்கு அனுமதி 108 நிறுவனங்கள் விண்ணப்பம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை