மேலும் செய்திகள்
நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
18 minutes ago
விலை நிலவரம்
31-Dec-2025
சந்தை துளிகள்
31-Dec-2025
நஷ்டத்தில் இயங்கும் 'குயிக் காமர்ஸ்' துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஐ.பி.ஓ., வெளியிட தடை விதிக்குமாறு, ஏ.ஐ.சி.பி.டி.எப்., எனும் 'அகில இந்திய நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு' செபியிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 'ஸெப்டோ' போன்ற நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டாத நிலையில், ஆரம்பகால முதலீட்டாளர்கள் வெளியேற ஐ.பி.ஓ.,வை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர். நிறுவனங்கள் நஷ்டத்தில் இருக்கும்போது, அதில் முதலீடு செய்யும் சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நிறுவனங்களின் வர்த்தக முறைகள் குறித்து இந்தியப் போட்டி ஆணையத்தில் ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, விசாரணை முடியும் வரை, புதிய ஐ.பி.ஓ.,க்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விநியோகஸ்தர்கள் வலியுறுத்துகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான இடமாக பங்குச் சந்தைகள் மாறி விடக்கூடாது. ஒரு நிறுவனம் லாபம் ஈட்டும் முன் ஐ.பி.ஓ., வெளியிடுவது அபாயகரமானது. - தைர்யஷீல் பாட்டீல், தலைவர் ஏ.ஐ.சி.பி.டி.எப்.,@@
18 minutes ago
31-Dec-2025
31-Dec-2025