உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

தொடர்ந்து சரியும் பி.எஸ்.இ., குரோ பி. எஸ்.இ., மற்றும் குரோ நிறுவனத்தின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்தன. பி.எஸ்.இ., பங்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக 2 சதவீதம் வரை சரிந்து 3,233 ரூபாயையும், குரோ பங்கு 2.50 சதவீதம் சரிந்து 195.60 ரூபாயையும் தொட்டது. செபியின் கட்டுப்பாடுகளால் முன்பேர வர்த்தக பரிவர்த்தனைகள் குறைந்து வருகிறது. எனவே, குறுகிய காலத்தில் புரோக்கரேஜ் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மதிப்பீடு குறைப்பால் ஐ.டி., பங்குகள் சரிவு கோ ட்டக், சி.எல்.எஸ்.ஏ., போன்ற முன்னணி சர்வதேச மற்றும் உள்நாட்டு தரகு நிறுவனங்கள் ஐ.டி., துறை பங்குகளின் தரவரிசையை குறைத்ததை தொடர்ந்து, நேற்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல்., டெக், எல்.டி.எம்., ஓ.எப்.எஸ்.எஸ்., மற்றும் இன்போசிஸ் உள்ளிட்ட முக்கியமான ஐ.டி., பங்குகள் சரிவை சந்தித்தன. நிப்டி ஐ.டி., குறியீடு வர்த்தகத்தின் இடையே 1 சதவீதம் சரிந்து 30,337 என்ற குறைந்தபட்ச அளவை தொட்டது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி அன்று 31,357.75 புள்ளிகளாக இருந்த இந்த குறியீடு, வார அடிப்படையில் 3 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சிஅடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 14.53 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. 7 சதவீதம் வரை சரிந்த சர்க்கரை ஆலை பங்குகள் ம த்திய அரசு வரிகளற்ற சர்க்கரை இறக்குமதிக்கு அனுமதி அளித்ததால், உள்நாட்டு சர்க்கரை விலை குறையும் என்ற அச்சத்தில் முன்னணி சர்க்கரை ஆலை பங்குகள் நேற்று 7 சதவீதம் வரை சரிந்தன. அரசின் இந்த நடவடிக்கை சர்க்கரை ஆலைகளின் லாபத்தை பாதிக்கும் என முதலீட்டாளர்கள் கருதுவதே இச்சரிவுக்கு காரணம். துவாரிகேஷ் சுகர் பங்கு அதிகபட்சமாக 7.2 சதவீதமும், டால்மியா பாரத் சுகர் 6.4 சதவீதமும், பல்ராம்பூர் சின்னி மில்ஸ் 5 சதவீதத்திற்கு மேலும் சரிவை சந்தித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !