மியூச்சுவல் பண்டு பங்கு சார்ந்த முதலீடு செப்., 9 சதவிகிதம் குறைந்தது
க டந்த செப்டம்பர் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு 9 சதவீதம் குறைந்ததாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கமான ஆம்பி தெரிவித்துள்ளது. பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஏற்பட்டுள்ள சரிவு இது. தற்போது சரிவு கண்டிருந்தாலும், இத்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு சீராகவே தொடர்கிறது. முதலீடு ஆகஸ்டு: ரூ.33,430 கோடி செப்டம்பர்: ரூ.30,421 கோடி 9% குறைவு