குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,918.10 26,074.65 25,856.20 26,052.65 நிப்டி பேங்க் 58,908.15 59,264.25 58,688.55 59,216.05 நிப்டி இறக்கத்தில் ஆரம்பித்து, பத்து மணிவரை இறக்கத்திலேயே பயணித்து, பின்னர் சிறிது சிறிதாக ஏற்றமடைந்த நிப்டி, நாளின் இறுதியில் 142 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 11 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.60 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால்கேப்400' குறைந்தபட்சமாக 0.06 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன. 'நிப்டி ஸ்மால்கேப்100' குறியீடு, அதிகபட்சமாக 0.43 சதவிகித இறக்கத்துடன் நிறைவடைந்தது. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில், 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி ஐ.டி.,' குறியீடு, அதிகபட்சமாக 2.97 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி ஆயில் அண்டு கேஸ்' குறியீடு, அதிகபட்சமாக 0.35 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,212 பங்குகளில், 1,413 ஏற்றத்துடனும்; 1,703 இறக்கத்துடனும்; 96 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. செய்திகள் சாதகமாக இருந்ததால், மீண்டும் ஏற்றம் வந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலைப்படி 25,850 என்ற லெவலுக்கு கீழே இறங்கினால், இறக்கத்திற்கான வாய்ப்பு உருவாகிறது என்பதையும்; 25,750 கீழே இறங்கினால், டிரென்ட் வீக்காகிறது என்பதையும் உறுதி செய்துகொள்ளலாம். ஆதரவு 25910 25770 25680 தடுப்பு 26125 26205 26275 நிப்டி பேங்க் பன்னிரண்டு மணி வரை இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி பேங்க், அதன் பின் ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 316 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 59,600 என்ற தடுப்பு லெவலை உடைத்து முன்னேறினால் மட்டுமே, அடுத்த கட்ட ஏற்றத்துக்கு தயாராகிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஆதரவு 58,840 58,475 58,250 தடுப்பு 59,410 59,625 59,845 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எச்.டி.எப்.சி., பேங்க் 994.80 2.35 1,98,13,847 72.58 டாடா ஸ்டீல் 173.20 0.75 1,96,21,610 46.01 டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வெகிக்கில்ஸ் 361.00 -10.30 1,78,54,517 55.38 பவர்கிரிட் 275.20 1.00 1,57,65,235 76.02 எட்டர்னல் 306.75 0.60 1,55,32,632 57.24 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 22.92 -0.07 6,05,90,652 39.87 சுஸ்லான் எனர்ஜி 56.57 -0.33 3,59,76,206 45.48 ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 102.80 -0.92 2,47,82,245 35.34 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 79.49 -0.62 2,42,34,217 53.53 பெடரல் பேங்க் 245.99 1.48 1,53,10,593 58.34 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஐநாக்ஸ் விண்ட் 139.84 -1.08 1,09,06,676 45.03 கே.இ.சி., இண்டர்நேஷனல் 710.20 -71.50 83,37,682 35.30 என்.பி.சி.சி., (இந்தியா) 112.90 -1.85 64,55,676 28.85 இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 137.17 0.52 35,28,588 41.04 பிரமல் பார்மா 189.20 -2.93 32,41,928 57.74 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை ஜிந்தால் ஸ்டெயின்லெஸ் லிட். 769.50 55.20 5,27,606 தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிட் 719.35 66.60 27,96,978 ஆக்சிஸ் பேங்க் லிட். 1,270.10 70.01 41,01,288 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 39.45 36.44 97,88,546 விப்ரோ லிட் 246.06 50.27 1,32,98,452 *****