உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சிஏஎஸ் முறையில் மாற்றம் செய்ய செபி திட்டம்

 சிஏஎஸ் முறையில் மாற்றம் செய்ய செபி திட்டம்

பங்கு சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சி.ஏ.எஸ்., எனப்படும் முடிவு ஏல அமர்வு முறையால் ஏற்படும் அதீத விலை ஏற்ற இறக்கங்களை தவிர்க்க, டெரிவேட்டிவ் செட்டில்மென்ட் முறையில் சில மாற்றங்களை கொண்டுவர செபி திட்டமிட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் குறித்து அக்டோபர் 3ம் தேதி வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். மாற்று திட்டங்கள்: 1 இணைந்த முறை: வர்த்தக நேரத்தின் கடைசி 30 நிமிடங்கள் மற்றும் சி.ஏ.எஸ்., வர்த்தக அமர்வின் 10 நிமிடங்கள் ஆகிய இரண்டையும் இணைத்து செட்டில்மென்ட் விலையை கணக்கிடுவது 2 தற்போதைய முறை: தற்போதைய முறையான, வர்த்தக நேரத்தின் கடைசி 30 நிமிடங்களை மட்டும் கணக்கில் கொள்ளும் முறையை ஒரு ஆண்டு காலத்துக்கு தொடர்ந்து பயன்படுத்திவிட்டு, அதன் பிறகு இணைந்த முறைக்கு மாறுவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ