டெக்னிக்கல் அனாலிசிஸ்: ஏற்றம் வர 25,990-ஐ கடந்து செல்ல வேண்டும்
நிப்டி 25,984.40 26,032.05 25,845.25 25,877.85 நிப்டி பேங்க் 58,152.05 58,331.20 57,999.20 58,031.10
நிப்டி
இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி வரை இறக்கத்திலேயே தொடர்ந்து, இறுதியில் 176 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 14 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் செலக்ட்' குறியீடு அதிகபட்சமாக 0.27% ஏற்றத்துடனும்; நிப்டி குறியீடு அதிகபட்சமாக 0.68% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 2 ஏற்றத்துடனும்; 15 இறக்கத்துடனும் நிறைவடைந்தது. இதில் 'நிப்டி எனர்ஜி' குறியீடு அதிகபட்சமாக 0.12% ஏற்றத்துடனும்; அதிகபட்சமாக 'நிப்டி பைனான்ஷியல் சர்வீசஸ் குறியீடு 0.77% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,178 பங்குகளில் 1,320 ஏற்றத்துடனும்; 1,745 இறக்கத்துடனும்; 113 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.
நிப்டி பேங்க்
இறக்கத்தில் ஆரம்பித்து, கடைசி ஒரு மணி நேரத்தில் கணிசமாக இறங்கி, நாளின் இறுதியில் 354 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. வேகமான இறக்கம் வந்துபோவதற்கான அறிகுறிகள் தென்பட்ட போதிலும், அதை உறுதி செய்ய 57,905-க்கு கீழ் வால்யூமுடன் நடக்கவேண்டும். இதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் சூழலே நிலவுகிறது. ஏற்றம் மீண்டும் தொடர 58,450 என்ற தடுப்பை கடந்து செல்லவேண்டும். ஆதரவு 57,905 57,780 57,660 தடுப்பு 58,240 58,450 58,575
Gallery