உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,500க்கு கீழே சரிந்தால் பெரிய இறக்கத்துக்கு வாய்ப்பு

டெக்னிக்கல் அனாலிசிஸ்: 25,500க்கு கீழே சரிந்தால் பெரிய இறக்கத்துக்கு வாய்ப்பு

காலை 10 மணி வரை சற்று ஏற்றத்தை சந்தித்த நிப்டி, அதன் பின்னால் இறங்க ஆரம்பித்து நாளின் இறுதியில் 41 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி100 குறியீடு, குறைந்தபட்சமாக 0.20 சதவீத இறக்கத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.90 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது.

19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 5 குறியீடுகள் ஏற்றத்துடனும், 14 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி பிஎஸ்யு பேங்க் அதிக பட்சமாக 1.29 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி மீடியா அதிகபட்சமாக 1.71 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வர்த்தகம் நடந்த 3,224 பங்குகளில் 1,054 ஏற்றத்துடனும், 2,083 இறக்கத்துடனும், 87 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 25,750-க்கு மேலே இருக்கும் வரை திசை-தெரியா நிலைக்கோ அல்லது சிறிய ஏற்றத்திற்கோ வாய்ப்புள்ளது எனலாம். 25,500-க்கு கீழே போகாத வரை டிரெண்ட் மாறிவிட்டது என்று கூற இயலாது. 26,100-க்கு மேலே சென்றால் மட்டுமே ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை