நிப்டி நன்பகல் 11 மணி வரையில் சிறிய ஏற்ற இறக்கங்களோடு நடைபெற்ற நிப்டி, அதன் பின்னர் வேகமான ஏற்றத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 152 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில், 12 ஏற்றத்துடனும்; 4 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.76 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 1.12 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 12 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 5 குறியீடுகள் இறக்கத்துடனும்; 2 குறியீடுகள் மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இதில் 'நிப்டி பி.எஸ்.யு.,பேங்க்' குறியீடு அதிகபட்சமாக 1.51 சதவீத ஏற்றத்துடனும்; நிப்டி மீடியா குறியீடு அதிகபட்சமாக 0.48 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,192 பங்குகளில், 1,331 ஏற்றத்துடனும்; 1,769 இறக்கத்துடனும்; 92 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. வெற்றிகரமாக 26,100 என்ற பழைய ரெசிஸ்டென்ஸை நிப்டி ஒரே பாய்ச்சலில் தாண்டிவிட்டது. இதனால் குறுகிய கால உந்துதல் (மொமென்டம்) நிப்டியில் சற்று அதிகமாகியுள்ளது. தற்போதைய டெக்னிக்கல் சூழலில் 26,260 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 26,125-க்கு கீழே செல்லாமல், அதேசமயம் செய்திகளும் சாதகமாக இருந்தால், 26,260-என்ற லெவலையும் தாண்டி மேலே செல்லவும் வாய்ப்புள்ளது. நிப்டி பேங்க் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றத்தில் நடைபெற்ற நிப்டி பேங்க், நாளின் இறுதியில் 488 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. செய்திகள் சாதகமாக இருந்த காரணத்தினால் டெக்னிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், வேகமான ஏற்றத்தை சந்தித்தது நிப்டி பேங்க். 59,560-க்கு கீழே போகாமலும், செய்திகள் தொடர்ந்து சாதகமாகவும் இருந்தால் 60,000 என்ற லெவல் வரையிலுமே சென்று திரும்ப வாய்ப்புள்ளது.