UPDATED : டிச 31, 2025 12:02 PM | ADDED : டிச 31, 2025 01:29 AM
நாள் முழுவதுமே சிறிய ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிப்டி, நாளின் இறுதியில் 3 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ல், 15 இறக்கத்துடனும்; 1 மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி 200' குறியீடு குறைந்தபட்சமாக 0.03 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால் கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.35 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில், 4 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மெட்டல் குறியீடு, அதிகபட்சமாக 2.03 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மிட்ஸ்மால் ஐ.டி., அண்டு டெலிகாம்' குறியீடு அதிகபட்சமாக 0.92 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. Galleryவர்த்தகம் நடந்த 3,244 பங்குகளில், 1,409 ஏற்றத்துடனும்; 1,723 இறக்கத்துடனும்; 112 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. குழப்பமான சூழ்நிலையில் செயல்படுவதைப்போல் தெரிந்தாலும், நேற்று எப் அண்டு ஓ., எக்ஸ்பயரி நடைபெற்றதால், இதனை உறுதியாக கூறமுடியாது. டெக்னிக்கலாக தற்போதைய சூழலில் 25,800 எனும் லெவல் முக்கியமானதொரு சப்போர்ட்டாக உருவெடுக்கிறது. இதற்கு மேலே இருக்கும் வரையில் பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவே. 26,300-க்கு மேலே சென்றால் மற்றுமே ஏற்றம் தொடரும் எனக்கூறலாம்.