உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / டெக்னிக்கல் அனாலிசிஸ்: சாதகமான தகவல் வராவிட்டால் ஏற்றத்திற்கு வாய்ப்பில்லை

டெக்னிக்கல் அனாலிசிஸ்: சாதகமான தகவல் வராவிட்டால் ஏற்றத்திற்கு வாய்ப்பில்லை

நிப்டி

காலை 10.30 மணி வரை இறக்கத்தில் வர்த்தகமான நிப்டி, அதன் பின் ஏற ஆரம்பித்தது. பிற்பகல் 2 மணிக்கு மேல் இறங்கி, மீண்டும் ஓரளவுக்கு மீண்டு நாளின் இறுதியில் 3 புள்ளிகள் குறைவுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16ல் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும் 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்கேப் 50 குறியீடு அதிகபட்சமாக 0.50 சதவிகித ஏற்றத்துடனும், நிப்டி மைக்ரோகேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.32 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.19 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும், 9 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில், நிப்டி ஐடி அதிகபட்சமாக 1.21 சதவிகித ஏற்றத்துடனும், நிப்டி மீடியா அதிகபட்சமாக 1.27 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,209 பங்குகளில் 1,271 ஏற்றத்துடனும், 1,824 இறக்கத்துடனும், 114 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன.குறுகிய கால சராசரிகளுக்கு உள்ளேயே நிப்டி தொடர்ந்து வர்த்தகமாகிறது. இது டெக்னிக்கலாக சைடுவேய்ஸ் என்பதை காட்டினாலுமே ஒரு சில இண்டிகேட்டர்கள் திடீர் இறக்கம் வந்துவிடக்கூடும் என்பதை போன்ற தோற்றத்தை காட்டுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் செய்திகளின் தாக்கம் மட்டுமே சந்தை வழிநடத்தும். செய்திகள் சாதகமாக இருந்தால் அன்றி ஏற்றம் வருவதற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக குறைவாகவே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி