உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இறக்கம் வந்து போவதற்கான வாய்ப்பு தெரிகிறது

இறக்கம் வந்து போவதற்கான வாய்ப்பு தெரிகிறது

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 25,901.20 25,934.35 25,825.80 25,868.60 நிப்டி பேங்க் 58,063.40 58,155.55 57,887.20 58,007.20 நிப்டி சிறப்பு வர்த்தகம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில், துவக்கத்தில் உயர்ந்து, கடைசி நேரத்தில் இறக்கத்தை சந்தித்து, பின் இறுதில் 25 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளில் 15 குறியீடுகள் ஏற்றத்துடனும்; ஒரு குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் ஏற்றத்தை சந்தித்த குறியீடுகள் மத்தியில், 'நிப்டி மைக்ரோகேப்250' அதிகபட்சமாக 1.30% ஏற்றத்துடனும்; நிப்டி மிட்கேப் செலக்ட் குறியீடு 0.01% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 17 துறை சார்ந்த சந்தை குறியீடுகளில் 14 ஏற்றத்துடனும்; 3 இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இதில் நிப்டி பிரைவேட் பேங்க் அதிக பட்சமாக மீடியா குறியீடு 0.56% ஏற்றத்துடனும், நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிக பட்சமாக 0.09% இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,039 பங்குகளில் 2,213 ஏற்றத்துடனும், 710 இறக்கத்துடனும், 116 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றத்திற்கான வாய்ப்பு இன்னமும் இருக்கிறது என்ற டெக்னிக்கல் சூழல் இருந்தாலும்கூட, குறுகிய கால அளவீட்டில் 'ஓவர் பாட்' நிலைமையை அடைந்திருக்கும் காரணத்தினால், இறக்கம் வந்து போவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்கிறது. ஆதரவு 25,815 25,765 25,720 தடுப்பு 25,925 25,975 26,030 நிப்டி பேங்க் ஏற்றத்தில் துவங்கி, கடைசி கால் மணி நேரத்திற்கு முன், நல்லதொரு இறக்கத்தை சந்தித்த நிப்டி பேங்க், வர்த்தக இறுதியில் 26 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. ஒரு சிறிய இறக்கமோ அல்லது ஓரிரு நாட்கள் திசைதெரியாத நிலையோ வந்த பின்னால் மட்டுமே ஏற்றம் தொடர்வதற்கு வாய்ப்பு இருப்பதைப்பொன்ற டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது. ஆதரவு 57,875 57,745 57,640 தடுப்பு 58,145 58,280 58,385 நிப்டி50 - டாப் - 5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எட்டர்னல் 338.00 -0.15 38,18,958 41.56 எச்.டி.எப்.சி., பேங்க் 1,004.00 1.05 34,71,600 63.63 டாடா மோட்டார்ஸ் 400.85 1.10 34,49,156 51.92 ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 1,381.30 -9.00 34,15,560 52.79 ஜியோ பைனான்சியல் 311.20 0.50 31,90,393 62.43 நிப்டி மிட்கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) எஸ் பேங்க் 22.75 0.11 2,57,43,458 53.19 சுஸ்லான் எனர்ஜி 54.17 1.08 2,28,21,584 50.51 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 76.66 -0.27 1,04,54,110 62.78 என்.எம்.டி.சி., லிட் 75.69 0.45 33,18,059 53.84 பெடரல் பேங்க் 227.45 0.37 29,50,169 50.14 நிப்டி ஸ்மால் கேப் 50 - டாப்-5 பங்குகள் (எண்ணிக்கை) நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) எண்ணிக்கை டெலிவரி (%) ஐநாக்ஸ் விண்ட் 149.20 2.41 30,12,646 50.29 இந்தியன் எனர்ஜி எக்சேஞ்ச் 139.10 0.81 17,59,872 47.97 என்.பி.சி.சி., லிட் 112.59 -0.89 16,97,859 54.59 சி.இ.எஸ்.சி., லிட். 180.40 1.27 14,64,007 56.75 பந்தன் பேங்க் 165.94 -1.05 11,55,259 48.56 நேற்று நடந்த வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சில பங்குகளின் புள்ளி விவரங்கள் நிறுவனம் கடைசி விலை டெலிவரி வால்யூம் (%) வர்த்தகம் நடந்த எண்ணிக்கை எச்.டி.எப்.சி., லைப் 743.50 49.51 1,19,115 எலிகான் என்ஜினியரிங் 552.40 64.85 1,29,491 ஜி.எம்.டி.சி., லிட் 584.00 39.43 6,28,043 லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் 168.40 46.85 8,96,146 பேங்க் ஆப் இந்தியா 130.10 55.17 37,59,439 *****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை