உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வீட்டில் இருந்தபடியே கரன்சியை மாற்றலாம்

 வீட்டில் இருந்தபடியே கரன்சியை மாற்றலாம்

வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்புவோர், வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநாட்டு கரன்சியை வீட்டிலிருந்தபடியே பெறும் வசதியை, 'புக் மை போரக்ஸ்' நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'மேக் மை ட்ரிப்'பின் துணை நிறுவனமான இது, வாடிக்கையாளர்கள் வார இறுதி நாட்களில் கரன்சியை மாற்றிக்கொள்வதில் ஏற்படும் சவால்களைக் களைய, இந்த வசதியை அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது. போரக்ஸ் கார்டு * வெளிநாட்டுப் பயணம் செய்வோர், அந்நாட்டு கரன்சியைக் கையில் வைத்துக்கொள்வதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம் * பணத்தை இதில் போடும்போது செலாவணியின் மதிப்பு என்னவோ, அது வரவு வைக்கப்படும் * இது, விசா, மாஸ்டர் கார்டுகளை ஏற்கும் கடைகள், ஏ.டி.எம்.,களில் உபயோகப்படும் * இந்தியாவில் வெளிநாட்டு கரன்சியின் தேவை, சப்ளையை விட அதிகரித்ததால் இக்கார்டுகளுக்கு மவுசு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை