உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / மின் வாகன குறியீடு என்.எஸ்.இ., அறிமுகம்

மின் வாகன குறியீடு என்.எஸ்.இ., அறிமுகம்

புதுடில்லி:பிரத்யேகமாக மின்சார வாகன நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்காக, புதிய மின்வாகன குறியீடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.இ., எனும் தேசிய பங்குச் சந்தையின் இணை நிறுவனமான 'என்.எஸ்.இ., இண்டைசிஸ்', நாட்டின் முதல் மின்சார வாகன குறியீட்டை நேற்று அறிமுகப்படுத்தியது. இக்குறியீட்டுக்கான அடிப்படை காலமாக கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதியும்; அடிப்படை மதிப்பாக 1,000 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை இந்த குறியீடு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மின்சார வாகன உற்பத்தியை தொடங்குவதற்கான முதலீடுகளை ஈர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், பங்கு சந்தையின் இந்த முடிவு அதற்கு வலுசேர்க்கும் என்று கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ