உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?

முதலீட்டின் பலனை பணவீக்கம் எப்படி பாதிக்கிறது?

சேமிப்பு மற்றும் முதலீடு செய்வது நிதி திட்டமிடலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதன் மூலம் எதிர்கால இலக்குகளை அடைவதும், செல்வ வளத்தை உருவாக்கி கொள்வதும் சாத்தியமாகிறது. முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவை அளிக்ககூடிய பலன், முதலீடு காலம், இடர் அம்சம் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுகின்றன. எனினும், முதலீடு தொடர்பான மற்றொருமுக்கிய அம்சத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணவீக்கம் தான் அது. பணவீக்கம் முதலீடு மீது தாக்கம் செலுத்தும் விதங்களை பார்க்கலாம்.

வாங்கும் சக்தி:

பணவீக்கம் என்பது காலப்போக்கில் பொருட்களின் விலை உயர்வை குறிக்கிறது. இது வாங்கும் சக்தியை பாதிக்கிறது. உதாரணமாக பணவீக்கம் 5 சதவீதம் என்றால், இப்போது 100 ரூபாய்க்கு வாங்கும் பொருள், 105 ரூபாயாக இருக்கும் என பொருள். எனவே, முதலீட்டின் பலனும் இந்த அளவிற்கு ஏற்ப இருக்க வேண்டும்.

முதலீடு தாக்கம்:

பணவீக்கம் வாங்கும் சக்தியை பாதிப்பதால், முதலீடு அளிக்கும் பலன் பணவீக்கத்தை விட அதிகமாகஇருக்க வேண்டும் என கருதப்படுகிறது. ஏனெனில், பணவீக்கம் 5 சதவீதமாக இருந்து முதலீடு அளிக்கும் பலன்,அதற்கும் குறைவாக இருந்தால், முதலீட்டின் பலன் எதிர்மறையாக இருக்கும்.

வைப்பு நிதி:

பரவலாக நாடப்படும் வைப்பு நிதி முதலீடு கொண்டு பணவீக்கத்தின் தாக்கத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம். பொதுவாக வைப்பு நிதி வட்டி விகிதம், 6 முதல் 7 சதவீதமாக அமையலாம். பணவீக்க விகிதத்தை கழித்துப்பார்த்தால், உண்மையான முதலீடு பலன் 1 சதவீதமாக இருக்கலாம். வரி தாக்கம் இதை இன்னும் பாதிக்கும்.

பங்குகள் பலன்:

பொதுவாக பங்குச்சந்தை முதலீடு இடர் மிக்கது என்றாலும், அவை அளிக்கும் பலன் நீண்ட கால நோக்கில் பணவீக்கத்தை வெல்லக்கூடியதாக கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் முதலீடும் பணவீக்கத்தை மிஞ்சக்கூடியதாக தங்கமும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அளிக்கிறது.

பரவலாக்கம்:

முதலீடுகள் பணவீக்கத்தை மிஞ்சும் பலன் அளிக்க வேண்டும் என்றாலும், அவற்றின் இடர் அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும். எனவே தான், ஒரே வகையான முதலீடுகளை மேற்கொள்ளாமல், பரவலான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A.Gomathinayagam
ஜூலை 13, 2024 14:11

அஞ்சலக ,மற்றும் வங்கி சேமிப்புகள் பண வீக்கத்திற்கு ஏற்ப வட்டி வருவாய் தருவதில்லை ,எனினும் வேறு வழியில்லாமல் தான் பாதுகாப்பு காரணமாக நடுத்தர மக்கள் அவைகளில் சேமிக்கிறார்கள் ,வங்கிகள் பண வீக்கத்திற்கு ஏற்ப வட்டி கொடுத்தாலே மட்டுமே அடி தட்டு மற்றும் நடுத்தர மக்கள் பயன் பெற முடியும்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ