உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / உலகளாவிய செய்திகளை உன்னிப்பாக கவனிப்பது நல்லது

உலகளாவிய செய்திகளை உன்னிப்பாக கவனிப்பது நல்லது

கடந்த வாரம் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முறையாக, ஜூலை மாத சில்லரை விலை பணவீக்கம் 3.54 சதவீதமாக குறைந்துள்ள தரவுகள் வெளியாகின  கடந்த மாதத்தில் பயணியர் வாகனங்களின் மொத்த விற்பனை, 2.50 சதவீதம் குறைந்து 3.42 லட்சமாக இருந்தது. தேவை சற்றே குறைந்ததை அடுத்து, தயாரிப்பு நிறுவனங்கள் முகவர்களுக்கு அனுப்பும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததே, இதற்கு காரணமாக அமைந்தது ரிசர்வ் வங்கி, கடன் பத்திரங்கள் மற்றும் தங்க கொள்முதல் வாயிலாக, கடந்த மாதம் கிட்டத்தட்ட 1.58 லட்சம் கோடி ரூபாய் அன்னிய செலாவணியை சேர்த்துள்ளது எஸ்.ஐ.பி., கணக்குகளின் சராசரி கையிருப்பு, கடந்த 50 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜூலையில் 2,500 ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 3,399 ரூபாயாக இருந்த சராசரி கையிருப்பு, அதன்பின் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிலைபெற்று வருகிறது  நடப்பு ஆகஸ்ட் மாத இறுதிக்குள், எம்.எஸ்.சி.ஐ., குறியீட்டில், இந்தியாவைச் சேர்ந்த ஏழு நிறுவன பங்குகள் சேர்க்கப்பட உள்ளதால், இந்திய சந்தைகளில் கிட்டத்தட்ட 25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்குகளின் மதிப்பு, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு ஜூலையில் 59 சதவீதம் அதிகரித்து, 42.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.வரும் வாரம் எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகள் வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதிகளின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன பெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டியின் கூட்ட நடவடிக்கைகளின் குறிப்பு, எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.கவனிக்க வேண்டியவை கடந்த வாரம் திங்களன்று 20 புள்ளி இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 208 புள்ளிகள் இறக்கம்; புதனன்று 4 புள்ளிகள் ஏற்றம்; வெள்ளி யன்று வர்த்தக நாளின் இறுதியில் 397 புள்ளிகள் ஏற்றத்துடன், நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில் 173 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது உலக சந்தைகள் காணும் ஏற்ற இறக்கங்கள், செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே சந்தையின் குறுகிய கால போக்கை நிர்ணயிக்கக் கூடியதாக இருக்கும்.டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், நிப்டியில் ஏறுவதற்கு தயக்கம் உருவாகியுள்ள சூழல் இருப்பதைப் போன்ற நிலைமையே உருவாகியுள்ளது. உலக சந்தைகள், பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்களை சந்தித்துவரும் சூழலில், சந்தையின் போக்கை நிர்ணையிப்பதில் உலகளாவிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே பெரும்பங்கு வகிக்கும். எனவே, டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு கணிக்கப்படும் கணிப்புகள், பெரும்பாலும் வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள், வரும் வாரத்திலும் அதிகமாகவே இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு, வர்த்தகர்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கான திட்டங்களை தீட்டிக்கொள்ள வேண்டும். நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்நிப்டி 24,239, 23,937 மற்றும் 23,760 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,703, 24,866 மற்றும் 25,043 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,402 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி