உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய பங்கு வெளியீடு

புதிய பங்கு வெளியீடு

கடந்த 2010ம் ஆண்டு துவங்கப்பட்ட, 'ஜே.என்.கே., இந்தியா' நிறுவனம், வெப்பமூட்டும் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஹீட்டர், பர்னஸ் போன்ற சாதனங்களின் வடிவமைப்பு, பொறியியல், தயாரிப்பு, வினியோகம் மற்றும் நிறுவுதல் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறது.தமிழகம், ஆந்திரா, அசாம், பீஹார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட இடங்களில், நிறுவனம் அதன் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. 'இந்தியன் ஆயில், டாடா பிராஜெக்ட்ஸ், ராஷ்டிரிய கெமிக்கல்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்கள், இதன் வாடிக்கையாளர்களாக உள்ளன.நிதி நிலவரம் கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 256 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 46 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 23.04.24முடியும் நாள் : 25.04.24பட்டியலிடும் நாள் : 30.04.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ., பங்கு விலை : ரூ. 395 - 415பங்கின் முகமதிப்பு : ரூ. 2புதிய பங்கு விற்பனை : ரூ. 300 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : 84.21 லட்ச பங்குகள் திரட்டப்படவுள்ள நிதி : ரூ.650 கோடி

ஜே.என்.கே., இந்தியா

ஜே.என்.கே., இந்தியா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி