உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / லாபம் அவ்வப்போது இறக்கம் வந்து போக வாய்ப்புள்ளது

லாபம் அவ்வப்போது இறக்கம் வந்து போக வாய்ப்புள்ளது

கடந்தவாரம்கடந்தாண்டு, நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, 11.40 சதவீதம் அதிகரித்து, 28.63 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு தெரிவித்ததுமுதலீட்டை விலக்கிக் கொண்டதன் வாயிலாகவும், சொத்துக்களை பணமாக்கியதன் வாயிலாகவும், கடந்த நிதியாண்டில், மத்திய அரசு 32,507 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. இது பட்ஜெட் மறு மதிப்பீட்டு இலக்கான 30,000 கோடி ரூபாயை விட அதிகமாகும் என்ற செய்தி வெளியானதுகிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பின், கடந்த மார்ச் காலாண்டில், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்க துவங்கியதாக செய்திகள் தெரிவித்தனகடந்த நிதியாண்டில், நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 17.70 சதவீதம் அதிகரித்து, 19.58 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இது பட்ஜெட் மறு மதிப்பீட்டு இலக்கை விட 13,000 கோடி ரூபாய் அதிகமாகும்அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு சார்ந்த முதலீடுகளின் மதிப்பு, சாதனை உச்சமாக 64 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. மூலதன பொருட்கள் மற்றும் வாகன பங்குகளில் அவர்களின் முதலீடுகள் அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்ததுஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் மின்சாரம், நிதி சேவைகள் துறை சார்ந்த பங்குகளில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இதே காலகட்டத்தில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் பிரிவிலிருந்து அதிகளவு முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர் வரும் வாரம்உள்கட்டமைப்பு உருவாக்கம், எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, வங்கிகளில் உள்ள வைப்பு தொகை வளர்ச்சி, வங்கிகள் வழங்கிய கடன்களின் அளவின் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றனஎஸ் அண்டு பி., கேஸ்-ஷில்லர் வீட்டு விலை குறியீடு, சிபி நுகர்வோர் நம்பிக்கை, ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவிகித முடிவு, ஏற்றுமதி, இறக்குமதி நிகர வர்த்தக அளவு, விவசாயமல்லாத பணிகள் உருவாக்கம், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, ஐ.எஸ்.எம்., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.கவனிக்க வேண்டியவைகடந்த வாரம் திங்களன்று, வர்த்தக நாளின் இறுதியில் 189 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 31 புள்ளிகள் ஏற்றம், புதனன்று 34 புள்ளிகள் ஏற்றம், வியாழனன்று 167 புள்ளிகள் ஏற்றம், வெள்ளியன்று 150 புள்ளிகள் இறக்கம் என்ற அளவில் நிறைவடைந்தது செய்திகள், நிகழ்வுகள், அமெரிக்க வட்டிவிகித முடிவுகள், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையே வரும் வாரத்தில் நிப்டி நகரக்கூடிய திசையை தீர்மானிப்பதாக இருக்கும். வர்த்தகர்கள் இவை அனைத்தையும் நினைவில் வைத்து, அதீத எச்சரிக்கையுடன், மிகவும் குறைந்த எண்ணிக்கையில், குறுகிய அளவிலான, நஷ்டத்தை குறைக்க உதவும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்வெள்ளிக்கிழமை சந்தை நிறைவடைந்த நிலைமையில் உள்ள டெக்னிக்கல் அனாலிசிஸ் நிலைமையின் அடிப்படையில் பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர வாய்ப்புள்ள சூழல் நிலவுவதைப் போன்ற தோற்றமே தென்படுகிறது. ஆனாலும், முடிந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், சந்தையில் வந்த இறக்கத்தைக் கணக்கில் வைத்து பார்த்தால், டெக்னிக்கலாக, இறக்கம் அவ்வப்போது வந்து போக வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்நிப்டி 22,203, 21,987 மற்றும் 21,823 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 22,631, 22,842 மற்றும் 23,006 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,475 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை