மேலும் செய்திகள்
'2000க்கு முந்தைய வாகனங்கள் தகர்க்கப்படலாம்'
16-Sep-2024
புதுடில்லி:பழைய வாகன தகர்ப்புக்கான கொள்கை என்பது, வாகனத்தின் வயது அடிப்படையில் மேற்கொள்ளப்படாது, அதன் புகை மாசு அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.டில்லியில், இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பேசிய மத்திய போக்குவரத்துத் துறை செயலர் அனுராக் ஜெயின் கூறியதாவது:பழைய வாகனங்களை திரும்பப் பெற்று தகர்க்கும் கொள்கை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. 15 ஆண்டுகள் நிறைவடைந்த வாகனங்களை தகர்க்கும் வகையில் கொள்கைமுடிவு எடுக்க நினைத்தால், மக்கள் பலர் கேள்வி எழுப்புகின்றனர். அதாவது, வாகனத்தை சரியாக பராமரித்து வருபவர்கள், ஏன் அதைத் தகர்க்க வேண்டும் என்று கேட்டு, அதுபோன்ற கொள்கை கூடாது என்கின்றனர்.எனவே, வாகனங்களின் புகை வெளியீடு, மாசு ஏற்படுத்தும் அளவை மட்டும் அடிப்படையாக கொள்ளலாமா என ஆய்வு செய்து வருகிறோம். புகை மாசுக்கான அடிப்படையை, பி.எஸ்., - 1, பி.எஸ்., - 2 அல்லது அதற்கு முந்தைய நிலை, இவற்றில் எதை கொள்வது என்ற கேள்வியும் எழுகிறது.புகை மாசு கணக்கீட்டைப் பொறுத்தவரை, நம்பகமான சோதனைக்குப் பிந்தைய சான்றிதழ் அவசியம். அதற்கான சோதனை வடிவமைப்புகள் தொடர்பாக அரசுக்கு வாகனத் துறையினர் உதவ வேண்டும். பழைய வாகனங்களைத் தகர்க்கும் அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில், பழைய வாகனத்தை கைவிட்டு, புதிய வாகனம் வாங்குவோருக்கு, 3 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க முன்வந்த வாகனத் துறையை பாராட்டுகிறோம்.இவ்வாறு அனுராக் ஜெயின் தெரிவித்தார்.நடைமுறை என்ன?� புதிய வாகனம் வாங்கும்போது, 15 ஆண்டு காலம் இயக்க அனுமதி� இதன்பின், நன்றாக பராமரிக்கப்படுபவற்றுக்கு மேலும் ஐந்து ஆண்டு தகுதிச் சான்று � இதன் பிறகும், வாகனத்தின் தகுதி நிலையைப் பொறுத்து, போக்குவரத்து துறை மேலும் சில ஆண்டுகள் நீட்டிப்பு வழங்குவதுண்டு•¶•
16-Sep-2024