உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / எண்கள் சொல்லும் செய்தி

எண்கள் சொல்லும் செய்தி

19,826 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாரத்மாலா திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார். பாரத்மாலா திட்டத்தின் கீழ் இதுவரை 26,425 கிலோமீட்டர் சாலை அமைக்க 'டெண்டர்' வழங்கப்பட்டுள்ளது. 15,000 கோடி ரூபாய்க்கு பங்கு வெளியீட்டின் வாயிலாக நிதி திரட்ட 'செபி'யிடம் ஒப்புதல் பெற்றுள்ளது எல்.ஜி., எலக்டிரானிக்ஸ் இந்தியா நிறுவனம். தாய் நிறுவனமான தென்கொரிய எல்.ஜி., நிறுவனம் அதன் 15 சதவீத பங்குகளை விற்க உள்ளதால், இது முற்றிலும் பங்குதாரர்களின் விற்பனையே ஆகும். 32 லட்சம் டன்னுக்கு நடப்பு ராபி பருவத்தில் பயிரிடப்பட்ட பருப்பு வகைகளை கொள்முதல் செய்ய உள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 21.64 லட்சம் டன் சன்னா; 9.40 லட்சம் டன் மைசூர் பருப்பு; 90,000 டன் உளுத்தம் பருப்பு; 13,600 டன் பாசிப் பருப்பு கொள்முதல் செய்ய திட்டமிடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13.91 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள், பிளிப்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான சூப்பர்.மணி செயலியில் கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்டது. அறிமுகமான ஓராண்டுக்குள் யு.பி.ஐ., பரிவர்த்தனை அளிக்கும் டாப் 10 செயலிகளில், ஐந்தாவது மிகப்பெரிய மூன்றாம் தரப்பு செயலியாக சூப்பர்.மணி மாறி உள்ளது. இந்தியாவில் 765.64 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகளுடன், போன்பே தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை