உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / அக்டோபரில் பறந்தவர்கள் 1.36 கோடி

அக்டோபரில் பறந்தவர்கள் 1.36 கோடி

புதுடில்லி:இந்தியாவின் உள்நாட்டு விமான பயணியர் போக்குவரத்து, கடந்த அக்டோபரில் 5.30 சதவீதம் அதிகரித்து, 1.36 கோடியாக உயர்ந்துள்ளதாக, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் உள்நாட்டு விமான பயணியர் போக்குவரத்து, கடந்த ஆண்டு அக்டோபரில் 1.26 கோடியாக இருந்த நிலையில், நடப்பாண்டு அக்டோபரில் 5.30 சதவீதம் அதிகரித்து, 1.36 கோடியை எட்டியுள்ளது.முன்னணி விமான நிறுவனங்களான 'இண்டிகோ' 86.40 லட்சம் பயணியரையும், 'ஏர் இந்தியா' 26.48 லட்சம், 'விஸ்தரா' 12.43 லட்சம் பயணியரையும் கையாண்டுள்ளது. குறைந்த விமானக் கட்டண நிறுவனமான 'ஸ்பைஸ் ஜெட்'டில் 3.35 லட்சம், 'ஆகாசா' ஏர் விமானத்தில் 6.16 லட்சம் பயணியரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை