ஸ்டாப்லாஸ்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வாரம்
கடந்த வாரம்
இந்தியாவில், கடந்த அக்டோபர் மாதத்தில், முறை சார் வேலை வாய்ப்பு உருவாக்கம் 13.40 லட்சமாக குறைந்துள்ளதாக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இ.பி.எப்.ஓ., தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.70 சதவீதமும்; கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.80 சதவீதமும் குறைவாகும் கடந்த செப்டம்பர் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.20 சதவீதமாக குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனினும், ஏற்றுமதி சரிவால், வர்த்தக பற்றாக்குறை 6.40 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது இந்த வாரத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 46 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, வெள்ளியன்று, வர்த்தக நேர முடிவில் 85.48 ரூபாயாக இருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவு, சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்தியாவில் நடப்பாண்டில் இதுவரை 91 பெருநிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக பெரு நிறுவனங்கள் 1.60 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன அரசின் செலவினம் அதிகரிப்பு, சிறப்பான பருவமழை, வலுவான ஊரக வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக, அடுத்தாண்டு கார் விற்பனை 5 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், நடப்பாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக, மத்திய அரசின் கீழ் இயங்கும் டி.பி.ஐ.ஐ.டி., தெரிவித்துள்ளது. கடந்த 25ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 1.57 லட்சம் ஸ்டார்ட் அப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாட்டின் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களிடையேயான நுகர்வு சமத்துவமின்மை, தொடர்ந்து குறைந்து வருவதாக, மத்திய அரசின் குடும்ப நுகர்வு செலவின ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர சராசரி நுகர்வு செலவினம், கிராமப்புறங்களில் 9.20 சதவீதம் உயர்ந்து 4,122 ரூபாயாகவும்; நகர்ப்புறங்களில் 8.30 சதவீதம் அதிகரித்து 6,996 ரூபாயாகவும் உள்ளது. வரும் வாரம்
உள்கட்டமைப்பு உருவாக்கம், நடப்பு கணக்கு நிலவரம், வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களின் அளவு, எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு, வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. சிகாகோ பி.எம்.ஐ., குறியீடு, கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை நிலவரம், எஸ் அண்டு பி/கேஸ் ஷில்லர் வீடுகள் விலை நிலவரம், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 165 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 25 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று 22 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 63 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 225 புள்ளிகள் ஏற்றத்துடன், நிப்டி நிறைவடைந்திருந்தது நிகழ்வுகள், செய்திகள், மற்றும் உலக சந்தைகளின் போக்கு போன்றவையே, வரும் வாரத்தில் இந்திய சந்தையின் ஏற்ற இறக்கங்களை தீர்மானிப்பதாக இருக்கும் எனலாம். நிப்டியில், இறக்கம் ஓரிரண்டு நாட்களுக்கு தொடர்வதற்கான சூழல் இருப்பதைப்போன்ற தோற்றமே, டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் தென்படுகிறது. கடந்த வாரம் நிப்டி கடந்துவந்த பாதையை வைத்துப் பார்த்தால், இன்னமும் முழுமையாக டெக்னிக்கல் அனாலிசிஸ் கொண்டு செய்யப்படும் அனுமானங்கள் செயல்படாமல் போவதற்கான வாய்ப்பு தொடரவே செய்கிறது எனலாம். வர்த்தகர்கள் இந்த சூழலை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். செய்திகள், உலகளாவிய நிகழ்வுகள் போன்றவையே வரும் வாரத்தில் நிப்டியின் ஏற்ற/இறக்கங்களை நிர்ணயம் செய்யும் காரணிகளாக இருக்கும். இது போன்ற சூழல்களில், பொதுவாக, வர்த்தகர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டியிருக்கும். வர்த்தகம் செய்வதில் சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில் பாதிக்கும் குறைவான எண்ணிக்கையில் வர்த்தகம் செய்தல், மிகவும் குறுகிய அளவிலான நஷ்டத்தனை குறைக்க உதவும் ஸ்டாப்லாஸ்களை உபயோகித்தல் போன்றவற்றை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. சந்தையில் வர்த்தகம் நடக்கும் எண்ணிக்கை அளவின் மீது அதாவது, சராசரியாக வர்த்தகமாகும் எண்ணிக்கை அளவில் மாறுதல்கள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதில் கவனம் வைத்து, வியாபாரம் செய்வதும் இது போன்ற சூழ்நிலையில் அவசியமான ஒன்றாகும். நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 23,661, 23,508 மற்றும் 23,397 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 23,952, 24,091 மற்றும் 24,203 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 23,800 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
றும்.