வங்கதேசத்துக்கு மின் வினியோகம் அதானி 60 சதவீதம் கட்
டாக்கா:வங்கதேச அரசு நிலுவை தொகையை செலுத்த தவறியதால், அந்நாட்டிற்கான மின்சார வினியோகத்தை, அதானி நிறுவனம் 60 சதவீதம் வரை நிறுத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு 1,600 மெகாவாட் மின்சாரத்தை அதானி பவர் நிறுவனம் வினியோகித்து வருகிறது. அதற்கு வங்கதேச அரசு செலுத்த வேண்டிய பாக்கி அதிகரித்து, 8,400 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. இதையடுத்து, பாக்கியை செலுத்தாததால் 60 சதவீத மின் வினியோகம் குறைக்கப்பட்டு, 520 மெகாவாட் மட்டுமே வங்கதேசத்துக்கு அனுப்பப்படுகிறது. இதை உறுதி செய்துள்ள வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம், நிலுவைத் தொகைக்காக எந்த மின்சார உற்பத்தி நிறுவனமும் தங்களை பணயக் கைதியாக்க அனுமதிக்க முடியாது என்று, தெரிவித்துள்ளது.