உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இந்திய நுகர்வோரின் மாறும் கடன் பழக்கம்

இந்திய நுகர்வோரின் மாறும் கடன் பழக்கம்

இந்திய நுகர்வோர் மத்தியில் ஸ்மார்ட் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடன் வசதியை நாடுவது அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.கடன் சேவை நிறுவனமான ஹோம்கிரெடிட் இந்தியா, சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட 17 நகரங்களில் உள்ள நுகர்வோர் மத்தியில் கடன் பழக்கம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், 'இந்தியா எப்படி கடன் வாங்குகிறது' எனும் தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்காக கடன் வாங்குவது, 2020ல் 1 சதவீதமாக இருந்தது தற்போது 37 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. சொந்த வீட்டை புதுப்பிக்க கடன் வாங்குவது 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதிய பொருட்களில் உள்ள ஆர்வத்தை இது உணர்த்துகிறது. வர்த்தக விரிவாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப் திட்டங்களுக்காக கடன் பெறுவது 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்விக்கடன் பெறுவது 4 சதவீதமாக நீடிக்கிறது. எனினும், மருத்துவ தேவைக்காக கடன் பெறுவது 3 சதவீதமாக குறைந்துள்ளது. திருமணத்திற்காக கடன் பெறுவது 5 சதவீதமாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி