உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறு
பணவீக்கம் தொடர்பான கணக்கீட்டில் இருந்து, உணவு விலை பணவீக்கத்தை நீக்குவது தவறானது. பணவீக்கத்தின் முக்கியமான பகுதிகளை நீக்கிவிட்டு, பணவீக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக கூறக்கூடாது.அப்போது உணவுப் பொருட்கள் அல்லது வேறு ஏதாவது விலை விண்ணை முட்டுமளவு உயர்ந்தால், அது பணவீக்க கணக்கீட்டுக்குள் இல்லாத நிலையில், ரிசர்வ் வங்கி கணிப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படாது.