உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / காலாவதி உணவுப்பொருள் விபரம் காலாண்டுக்கு ஒருமுறை கட்டாயம்

காலாவதி உணவுப்பொருள் விபரம் காலாண்டுக்கு ஒருமுறை கட்டாயம்

புதுடில்லி:'நிராகரிக்கப்பட்ட, காலாவதியாகும் உணவுப் பொருட்கள் தொடர்பான தரவுகளை, காலாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. உரிமம் பெற்ற அனைத்து உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துஉள்ளது.மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:காலாவதியான உணவுப் பொருட்கள், மனித நுகர்வுக்கும், சில நேரங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக மாற்றி, மறுவிற்பனைக்கு வருவதை கண்காணித்து, தடுப்பதே இந்த உத்தரவின் முதன்மையான நோக்கமாகும். இது உணவுப் பொருட்களை பேக்கிங் செய்து, விற்பனை செய்பவர்களுக்கும் பொருந்தும். சமர்ப்பிக்கப்படும் தரவுகளில், நிறுவனத்தின் தரப்படுத்தல் சோதனையின் போது தோல்வியடைந்த பொருட்களின் அளவு, காலாவதியான பொருட்களின், வினியோக தொடரில் இருந்து விற்பனையாகாமல் திரும்பி வந்த பொருட்கள் ஆகிய மூன்று முக்கிய விபரங்கள் இடம்பெற வேண்டும். மேலும், காலாவதியான உணவுப்பொருட்கள் எவ்வாறு அகற்றப்பட்டன என்ற விபரத்தையும் வழங்க வேண்டும். அழிக்கப்பட்டது அல்லது, மாற்று பயன்பாடுக்கு அனுப்பப்பட்டு இருப்பின், வாங்குபவர் குறித்த தகவல், கழிவுகளை அகற்றிய முகவர் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும். கட்டாய நடைமுறை என்பதால், உணவுப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தரவுகளை சேகரிக்க துவங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அப்போது தான், முழுதும் செயல்பாட்டுக்கு வரும் போது, உரிய காலத்திற்குள் தரவுகளை சமர்ப்பிக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை