உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி அக்டோபரில் 9.18 சதவீதம் அதிகரிப்பு

ரத்தினங்கள், நகைகள் ஏற்றுமதி அக்டோபரில் 9.18 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி:வைரங்களின் தேவை அதிகரிப்பால், நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி கடந்த அக்டோபரில் 9.18 சதவீதம் உயர்ந்ததாக, நவரத்தினங்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சில் தெரிவித்திருப்பதாவது: வைர நகைகளுக்கான தேவை அதிகரிப்பால், இந்தியாவின் நவரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, கடந்த அக்டோபரில் 9.18 சதவீதம் அதிகரித்து, 25,194 கோடி ரூபாயானது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 22,857 கோடி ரூபாயாக இது இருந்தது. தரவுகளின்படி, நடப்பாண்டு அக்டோபரில் மெருகூட்டப்பட்ட வைரத்தின் ஏற்றுமதி 11.32 சதவீதம் அதிகரித்து, 11,796 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டு 10,495 கோடி ரூபாயாக இருந்தது. மேலும், இம்மாதத்தில் தங்க நகைகளின் ஏற்றுமதியும் 8.80 சதவீதம் அதிகரித்து, 9,450 கோடி ரூபாயானது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 8,603 கோடி ரூபாயாக இருந்தது. மெருகேற்றப்பட்ட செயற்கை வைரங்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு அக்டோபரில் பதிவான 1,135 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு அக்டோபரில் 1.27 சதவீதம் அதிகரித்து 1,161 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இவ்வாறு தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ