உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஜி.எஸ்.டி., நிலுவைக்கு காலக்கெடு

ஜி.எஸ்.டி., நிலுவைக்கு காலக்கெடு

புதுடில்லி:ஜி.எஸ்.டி.,யை கடைசி தேதிக்குள் செலுத்த தவறுவோர், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மாதாந்திர, ஆண்டு வரி செலுத்த அனுமதியில்லை என, ஜி.எஸ்.டி., நெட்வொர்க் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, வரி வசூலிப்பு அதிகாரிகளுக்கு ஜி.எஸ்.டி., நெட்வொர்க் தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி., செலுத்துவதற்கான காலக்கெடுவை தவற விட்டவர்கள், கெடு தேதியில் இருந்து மூன்றாண்டுகளுக்குள், விடுபட்ட மாதாந்திர, ஆண்டு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், அதன் பிறகு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படாது.அடுத்த ஆண்டு துவக்கத்தில், இதற்கான மாறுதல்கள் ஜி.எஸ்.டி., இணைய தளத்தில் இடம்பெறச் செய்யப்படும். தங்களது ஆவணங்களை மறுசீராய்வு செய்து, ஜி.எஸ்.டி., நிலுவைதாரர்கள் விரைவாக வரி செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை