உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., வரும் சுரக்ஷா டயக்னாஸ்டிக்

ஐ.பி.ஓ., வரும் சுரக்ஷா டயக்னாஸ்டிக்

புதுடில்லி:கோல்கட்டாவை தலைமையிடமாகக் கொண்ட சுரக்ஷா டயக்னாஸ்டிக், வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை, 30 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 846 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. தன் பங்குதாரர்கள் வசமுள்ள கிட்டத்தட்ட 1.92 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. முதலீட்டாளர்கள் வரும் நவ.,28 முதல் டிச.,3 வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.ஒரு பங்கின் விலை 420 - 441 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 50 சதவீதம் பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 10 சதவீதம் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை