ஜன.,1ல் தனி வணிகமாகும் ஐ.டி.சி.,ஹோட்டல்ஸ்
கோல்கட்டா:'தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் உத்தரவைத் தொடர்ந்து, ஐ.டி.சி., ஹோட்டல்ஸ், வரும் 2025, ஜன.,1 முதல், ஐ.டி.சி., நிறுவனத்தில் இருந்து பிரிந்து, தனி நிறுவனமாக செயல்பட துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.நுகர்பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் ஐ.டி.சி., குழுமம், நாட்டின் சுற்றுலா, வளர்ச்சி கண்டு வரும் நிலையில், தனது ஹோட்டல் வணிகத்தை தனியாக பிரிக்க முடிவு செய்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பங்குதாரர்கள் கூட்டத்தில், ஹோட்டல் வணிகத்தை தனியாக பிரிக்க, 99.6 சதவீதம் பேர் ஆதரவாக ஓட்டளித்தனர்.