உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / 4 நாட்களில் ரூ.9.65 லட்சம் கோடி இழப்பு

4 நாட்களில் ரூ.9.65 லட்சம் கோடி இழப்பு

• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் அதிக இறக்கத்துடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதத்துக்கு மேல் சரிவு கண்டன• அமெரிக்க மத்திய வங்கி, கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்ததுடன், அடுத்தாண்டு இரண்டு முறை வட்டி குறைப்பை எதிர்பார்க்கலாம் என அறிவித்தது. இதனுடன், அன்னிய முதலீடுகள் வெளியேற்றமும் சேர்ந்து கொண்டதால், நேற்று வர்த்தகம் ஆரம்பித்தபோதே, இந்திய சந்தை குறியீடுகள் வீழ்ச்சியுடன் துவங்கின • இதனால், கவலையில் ஆழ்ந்த முதலீட்டாளர்கள், ஐ.டி., வங்கிகள் சார்ந்த முன்னணி நிறுவன பங்குகளை பெருமளவில் விற்பனை செய்தனர். நவ., 28ம் தேதிக்கு பின், சந்தை மூன்று வாரங்களில் காணாத சரிவை சந்தித்தது • நிப்டி குறியீட்டில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடுகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, ஐ.டி., நிதி நிறுவனங்கள், வங்கிகள், உலோகம், எனர்ஜி, ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 1 சதவீதம் சரிவடைந்தது• தொடர்ச்சியாக நான்கு வர்த்தக நாட்கள் சந்தை சரிவை கண்டதால், முதலீட்டாளர்களுக்கு 9.65 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது• மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், 2,229 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,693 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 103 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 4,225 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.08- சதவீதம் குறைந்து, 73.33 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 பைசா குறைந்து, வரலாறு காணாத அளவில் 85.13 ரூபாயாக சரிந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டாக்டர் ரெட்டீஸ் சிப்லா பி.பி.சி.எல்., சன் பார்மா அப்பல்லோ ஹாஸ்பிட்டல்அதிக இறக்கம் கண்டவை பஜாஜ் பின்சர்வ் ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் பஜாஜ் பைனான்ஸ் கிராசிம்  ஏசியன் பெயின்ட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ