சந்தை துளிகள்
ஐ.பி.ஓ., வருகிறது ஓரியன்ட் கேபிள்ஸ்
டில்லியை தலைமையிடமாக கொண்டு நெட்வொர்க்கிங் கேபிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓரியன்ட் கேபிள்ஸ் நிறுவனம், 700 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட , புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது. முதலீட்டாளர் வசமுள்ள பங்குகளை விற்பனை வாயிலாக 380 கோடி ரூபாயும்; புதிய பங்குகள் விற்பனை வாயிலாக 320 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதில், 91.50 கோடி ரூபாயை இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கும், 155.50 கோடி ரூபாயை கடன்களை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளது.
ரூ.6,000 கோடிதிரட்டும் ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி @@ உ.பி.,யின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் சோலார் செல்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 'ஐநாக்ஸ் கிளீன் எனர்ஜி', புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 6,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட ரகசிய முறையில் விண்ணப்பித்து உள்ளது. புதிய பங்கு விற்பனை வாயிலாக திரட்டப்படும் தொகையில் பெரும்பகுதியை, புதிய சோலார் திட்டங்களுக்கு பயன்படுத்த உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரிவில், மிகப்பெரிய ஐ.பி.ஓ., இதுவாகும்.