உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ஐ.பி.ஓ., வருகிறது மௌரி டெக்

ஐ.பி.ஓ., வருகிறது மௌரி டெக்

செயற்கை நுண்ணறிவை முதன்மையாகக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கி வரும் 'மௌரி டெக்' நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு விண்ணப்பித்திருந்த நிலையில், வெளிப்படையாக காரணம் கூறாமல், கடந்த டிசம்பரில் விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது.இந்நிலையில், தற்போது புதிய பங்கு வெளியீடு வாயிலாக 250 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்கு விற்பனை வாயிலாக 1,250 கோடி ரூபாயும் திரட்ட உள்ளதாக தெரிவித்துள்ளது. திரட்டப்படவுள்ள நிதி, அமெரிக்காவில் உள்ள துணை நிறுவனத்தின் கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனங்களை கையகப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி