உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சீன சோலார் செல் இறக்குமதி தடுப்பு வரி விதிக்க பரிந்துரை

சீன சோலார் செல் இறக்குமதி தடுப்பு வரி விதிக்க பரிந்துரை

புதுடில்லி:சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க டி.ஜி.டி.ஆர்., எனும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. வரி விதிப்பது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் இறுதி முடிவெடுக்கும். உள்நாட்டு தொழில்துறையினரின் நலன் காக்க இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக டி.ஜி.டி.ஆர்., தெரிவித்துள்ளது. மேலும் தெரிவித்துள்ளதாவது: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் செல்கள், சராசரி விலையை விட, குறைவாக இறக்குமதி செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. எனவே, சோலார் மாட்யூலில் அசெம்பிள் செய்யப்பட்ட அல்லது செய்யப்படாத மற்றும் பேனல்களில் பொருத்தப்பட்ட அல்லது பொருத்தப்படாத சோலார் செல்களின் இறக்குமதிக்கு,அடுத்தமூன்று ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதன் இறக்குமதிகளுக்கு 23 முதல் 30 சதவீதம் வரை வரி விதிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு அறிவிப்பில் சிலி மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 'விர்ஜின் மல்டி லேயர்' வகை பேப்பர் போர்டுகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை