மேலும் செய்திகள்
டிரெண்ட் மாற 25,200-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்
03-Mar-2026
இந்திய பொருளாதாரத்தின் அசைக்க முடியாத துாண்
01-Mar-2026
சேலம் ஜவ்வரிசி நேரடியாக கனடாவுக்கு ஏற்றுமதி
21-Feb-2026
* மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1.71 சதவீத உயர்வை கண்டது. அத்துடன், இதுவரை இல்லாத உச்சத்தையும் கண்டது.* மூன்றாவது காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, யாரும் எதிர்பாராத அளவுக்கு 8.40 சதவீதமாக உயர்வைக் கண்டது, சந்தைக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. இதனால் சென்செக்ஸ், நிப்டி ஆகியவை புதிய உச்சத்தை தொட்டன* ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல் மற்றும் வங்கி துறை பங்குகள் அதிகளவில் ஏற்றத்தை கண்டன. டாடா ஸ்டீல் 6.46 சதவீதம் அளவுக்கு விலை உயர்வைக் கண்டது. இருப்பினும் எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா போன்ற பங்குகள், விலை சரிவைக் கண்டன* மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, எதிர்பார்ப்பையும் மீறி கண்ட வளர்ச்சி, அமெரிக்க பணவீக்கம் தளர்வு ஆகியவை, சந்தை உயர்வைக் காண மிக முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் நிலையான ஆட்சி குறித்த முதலீட்டாளர்கள் நம்பிக்கையும் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது* இதேபோல், இந்தியாவின் தயாரிப்புத் துறை உற்பத்தி பிப்ரவரியில் ஐந்து மாதங்களில் இல்லாத உயர்வை கண்டதாக வந்த செய்தியும், முதலீட்டாளர்களை மகிழ்ச்சி கொள்ள வைத்தது. மேலும், பிப்ரவரி மாத வாகன விற்பனை நிலவரமும் ஏற்றத்தில் இருந்தது.* அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், வியாழன்று, கிட்டத்தட்ட 3,568 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி குவித்ததும், முதலீட்டாளர்களை குஷிப்படுத்துவதாக அமைந்தது
முந்தைய முடிவு : 21,982.80நேற்றைய முடிவு: 22,338.75மாற்றம்: 355.96 ஏற்றம் பச்சை
முந்தைய முடிவு: 72,500.30நேற்றைய முடிவு: 73,745.35மாற்றம்: 1245.05 ஏற்றம் பச்சை
டாடா ஸ்டீல்ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல்எல் அண்டு டி.,டைட்டன் கம்பெனிஇண்டஸ்இண்ட் பேங்க்
டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ்எச்.சி.எல்., டெக்சன்பார்மாஇன்போசிஸ்பிரிட்டானியா
(மும்பை பங்கு சந்தை) ஏற்றம் கண்டவை : 60%இறக்கம் கண்டவை : 37%மாற்றம் காணாதவை: 3%
03-Mar-2026
01-Mar-2026
21-Feb-2026