உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி ஏற்றம் கண்டன. அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, உலகளாவிய சந்தைகள் உயர்ந்தன. இது, இந்திய பங்குச் சந்தைகளிலும் பிரதிபலித்தது. கடந்த இரண்டு நாட்களாக அன்னிய முதலீட்டாளர்களின் அதிகளவு முதலீடு செய்தது இதற்கு வலுசேர்த்தது. காலையில் மந்தமாக துவங்கிய சந்தைகள் பின், நல்ல உயர்வு கண்டன. சென்செக்ஸ் 391 புள்ளிகளும்; நிப்டி 118 புள்ளிகளும் அதிகரித்தது. எனினும் முதலீட்டாளர்கள் லாபம் ஈட்ட முயன்றதால் இது நீடிக்கவில்லை.இதனிடையே, மாதாந்திர மின்சார பிரிவுமுன்பேர வணிகத்தை துவங்க, தேசிய பங்குச் சந்தைக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

உலக சந்தைகள்

செவ்வாயன்று அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., ஹாங்காங்கின் ஹாங்சேங் என அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் முடிவடைந்தன; ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.

உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%)

எச்.சி.எல்., டெக் 3.19இன்போசிஸ் 2.01டெக் மஹிந்திரா 1.68

உயர்வுக்கு காரணங்கள்

1அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக உடன்பாடு2 அன்னிய முதலீட்டாளர்கள் அதிக முதலீடு

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 446 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை, நேற்று 1 பேரலுக்கு 0.43 சதவீதம் அதிகரித்து, 67.16 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா அதிகரித்து, 85.53 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை