உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

இரண்டாவது நாளாக இறக்கம்

வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, நிப்டி, சென்செக்ஸ் இறக்கத்துடன் நிறைவு செய்தன. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்பு, ஆசிய பங்கு சந்தைகளின் உயர்வு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நேற்று வர்த்தகம் துவங்கிய போது, இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. பிற்பகல் வரை சந்தை குறியீடுகள் உயர்வுடன் வர்த்தகமான நிலையில், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், வாராந்திர ஒப்பந்தங்கள் காலாவதியை ஒட்டி, கடைசி மணி நேரத்தில்,நிதி, உலோகத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்றனர். இதனால், இரண்டாவது நாளாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவடைந்தன.

சரிவுக்கு காரணங்கள்

1நிதி, உலோகத்துறை பங்குகளை முதலீட்டாளர்கள் விற்றது2தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேறி வருவது

அன்னிய முதலீடு

அன்னிய முதலீட்டாளர்கள் 1,481 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.

கச்சா எண்ணெய்

உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.03 சதவீதம் குறைந்து, 68.40 அமெரிக்க டாலராக இருந்தது.

ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா அதிகரித்து, 85.55 ரூபாயாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை