உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.14,000 கோடியை கடந்த ஜனவரி ஜவுளி ஏற்றுமதி

ரூ.14,000 கோடியை கடந்த ஜனவரி ஜவுளி ஏற்றுமதி

கோவை:கடந்த ஜனவரியில் இந்திய ஜவுளி ஏற்றுமதி 1.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, அதாவது, கிட்டத்தட்ட 14,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. ஏற்றுமதி அதிகரித்திருப்பதால், ஜவுளித்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட, இது 11.5 சதவீதம் அதிகம். கடந்த ஜன., 9,048 கோடி ரூபாய் அளவுக்கு பருத்தி நுால், பருத்தி ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், 16.4 சதவீதம் அதிகம். இந்த நிதியாண்டில், ஏப்., முதல் ஜன., வரை, இந்திய ஜவுளித்துறை ஏற்றுமதி 1.12 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது முந்தைய ஆண்டை விட, 11.6 சதவீதம் அதிகம்.இதுதொடர்பாக, இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:அமெரிக்காவுக்கு இந்த நிதியாண்டின் முதல் 8 மாதங்களில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி, 20 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜனவரியில் நாம் அடைந்த வளர்ச்சியைத் தக்க வைப்பதன் வாயிலாக, ஆண்டுக்கு சுமார் 1.65 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி என்ற இலக்கை, 25-26ம்நிதியாண்டில் எட்ட வாய்ப்பிருக்கிறது.இவ்வாறு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை