மேலும் செய்திகள்
வர்த்தக துளிகள்
29-Sep-2025
பங்குச்சந்தை ஒரு பார்வை
28-Sep-2025
மாநில அரசுகள் பசுமை மின்சாரம் வாங்க வலியுறுத்தல்
22-Sep-2025
சென்னை:வியட்நாம் நாட்டின் 'வின்பாஸ்ட்' நிறுவனம், துாத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது. ஆலை, முதற்கட்டமாக ஆண்டுக்கு, 50,000 கார்களை தயாரிக்கும் திறன் உடையதாக இருக்கும்.செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் செயல்பட்டு வந்த, 'போர்டு' நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் மின்சார கார் தயாரிக்க, வின்பாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் அந்த இடம் கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க வின்பாஸ்ட் ஆர்வம் காட்டவில்லை. இந்த தகவல் தமிழக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு சென்றதையடுத்து தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறும், தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும், வின்பாஸ்ட் நிறுவன அதிகாரிகளிடம் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, அந்நிறுவனம் தற்போது சென்னையை போல் துறைமுக வசதி உடைய துாத்துக்குடி மாவட்டத்தில், 400 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், வரும் 7, 8ம் தேதிகளில் நடக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.துாத்துக்குடியில், முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு, 50,000 மின்சார கார் தயாரிக்கும் திறன் உடைய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
29-Sep-2025
28-Sep-2025
22-Sep-2025