மேலும் செய்திகள்
புதுச்சேரியில் முன்கூட்டியே துவங்கிய பனிப்பொழிவு
17 minutes ago
தீபாவளி நிதியுதவி சிறப்பு முகாம் அமைச்சர் ராஜவேலு அறிவிப்பு
31 minutes ago
அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் ரிசார்ட்டிற்கு ‘சீல்’
31 minutes ago
ஆமதாபாத்:''செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்படையவில்லை. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி, தன் சொந்த மாநில மான குஜராத்தில், நேற்று பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்றார்; தாகேஜ் என்ற இடத்தில், வர்த்தக துறை நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் பேசியதாவது: பழைய, 500 - 1,000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித் தன; பொருளாதாரம் பெரிய பின்னடைவை சந்திக் கும் என்றன. ஆனால், செல்லாத ரூபாய்நோட்டு அறிவிப்பால் பொருளாதாரம் பாதிப்படையவில்லை; வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு, பொது மக்கள், தொழில் துறையினர் மட்டுமின்றி, பல அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்தன; உறுதி யான நடவடிக்கை என, உலக நாடுகள் பாராட்டின.எதிர்க்கட்சிகள், அரசியலுக்காக இதை விமர்சிக் கின்றன. 2014ல், மத்தியில்,பா.ஜ., ஆட்சி பொறுப் பேற்கும் முன், நாட்டின் பணவீக்கம் மிக மோசமான நிலையில் இருந்தது. தற்போது அது சீரடைந்து வருகிறது, என்றார்.வளர்ச்சி திட்டங்கள்: பரூச் நகரில் பிரதமர் பேசியதாவது: நாட்டின்சாலை மேம்பாட்டு திட்டங்களில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியில், நாள் ஒன்றுக்கு, 2 கி.மீ., தொலை வுக்கு மட்டுமே புதிய தேசிய நெடுஞ் சாலைகள் அமைக்கப்பட்டன; தற்போது இது, 22 கி.மீ.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்றார்.
17 minutes ago
31 minutes ago
31 minutes ago