மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
22 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி.,க்களை, சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்துப் பேசினார். பார்லிமென்டில் 2008ல், மன்மோகன் சிங் அரசு மீது நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெறுவதற்காக, பாரதிய ஜனதா கட்சி எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் அமர்சிங் உள்ளிட்ட ஐந்து பேர், கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ஜ., கட்சியின் முன்னாள் எம்.பி.,க்கள் பகன்சிங் குலாஸ்தி மற்றும் மகாவீர் பக்கோரா ஆகியோரை. லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் நேற்று சந்தித்துப் பேசினார்.
இது குறித்து சுஷ்மா சுவராஜ் குறிப்பிடுகையில், 'தங்களுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சத்தை வெளிப்படுத்தியதற்காக இந்த எம்.பி.,க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் உண்மையின் பக்கம் நிற்கிறார்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி' என்றார்.
22 minutes ago
1 hour(s) ago | 2
1 hour(s) ago | 2